தமிழறிஞர் பத்மஸ்ரீ அவ்வை நடராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்

தமிழறிஞர் பத்மஸ்ரீ அவ்வை நடராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்
தமிழறிஞர் பத்மஸ்ரீ அவ்வை நடராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்
Published on

தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு எனும் ஊரில் ஒளவை துரைசாமி மற்றும் லோகாம்பாள் தம்பதியின் மகனாக 1936 ஆம் ஆண்டு பிறந்தவர் அவ்வை நடராஜன். மதுரையிலுள்ள தியாகராசர் கல்லூரி, தஞ்சாவூரிலுள்ள மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் இவர்.

டெல்லியிலுள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் ஔவை நடராசன் பணியாற்றியுள்ளார். 1992 முதல் 1995 வரை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்திற்கான அவரது பங்களிப்புகளை கௌரவிக்கும் விதமாக 2011 ஆம் ஆண்டு  இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ  விருதை வழங்கி கௌரவித்தது. உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடராஜன் இன்று இரவு காலமானார்.

இறுதி அஞ்சலிக்காக அண்ணாநகர் 2 ஆவது பிரதான சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட உள்ளது. அவ்வை நடராஜன் உடலுக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் நாளை காலை அஞ்சலி செலுத்த உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com