நெல்லை கண்ணனுக்கு 13-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் !

நெல்லை கண்ணனுக்கு 13-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் !
நெல்லை கண்ணனுக்கு 13-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் !
Published on

பிரதமர் மோடியை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நெல்லை கண்ணனை வரும் 13-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பாபு உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில், நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் மாநாடு நடந்தது. அதில் பங்கேற்று பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறு பரப்பியதாக, பாஜகவினர் தமிழகம் முழுவதும் பல்வேறு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆளுநரிடமும் புகார் அளித்தனர்.

அத்துடன், நெல்லைக் கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி பாஜக தலைவர்கள் நேற்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட அவர்கள் சிறிது நேரத்திற்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அதேபோல், தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், பிரதமர் மோடி, அமித் ஷா குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த புகாரில் நெல்லை கண்ணன் நேற்று இரவு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை வரும் 13-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com