‌குழந்தை திருமண‌த்தில் தமிழகம் முதலிடம்: அதிர்ச்சி தகவல்!

‌குழந்தை திருமண‌த்தில் தமிழகம் முதலிடம்: அதிர்ச்சி தகவல்!
‌குழந்தை திருமண‌த்தில் தமிழகம் முதலிடம்: அதிர்ச்சி தகவல்!
Published on

நாட்டிலேயே குழந்தை திருமணம் அதிக அளவில் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

‌இது தொடர்பாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், கடந்த ‌ஆண்டு மட்டும் தமிழகத்தில் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 55 வழக்குகள் பதிவாகி இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டு‌ள்ளது. அதிகபட்சமாக 2015ஆம் ஆண்டில் 77 வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் 51 வழக்குகள் பதிவாகியுள்ளன. மூன்றாம் இடத்தில் உள்ள மேற்கு வங்கத்தில் 41 வழக்குகள் பதிவாகியுள்ளன.

‌அருணாச்சல பிரதேசம், பீகார், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், சண்டிகர், லட்சத்தீவு, கோவா ஆகிய மாநிலங்களில் ஒரு வழக்கு கூட பதிவாக‌வில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின் கீழ் 326 வழக்குகள் பதிவாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது கடந்த இரு ஆண்டுகளை காட்டிலும் அதிகம் என தேசிய குற்ற‌ ஆவணக் காப்பகம் கவலை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com