(கோப்பு புகைப்படம்)
தமிழகத்தில் தனியார் ரயில்களை அனுமதிப்பதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதால் இந்த ஆண்டு இறுதிக்குள் அவை செயல்பாட்டுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
தனியார் ரயில்களை அனுமதிக்க தேவையான அடிப்படை பணிகளை தென்னக ரயில்வே முடித்துள்ளதால்,. இம்மாத இறுதியிலேயே இதற்கான நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும் எனத் தெரிகிறது. சென்னையில் இருந்து 11 வழித்தடங்களில் ரயில்களை இயக்குவதற்கான ஒப்பந்தம் இம்மாத இறுதியில் கோரப்பட உள்ளதாக தென்னக ரயில்வே கூறுகிறது.
இதன்படி சென்னையில் இருந்து கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, கன்னியாகுமரி, மும்பை , மங்களூரு ஆகிய வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் சுனீத் சர்மா , காணொலி கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ஒப்பந்தம் கோரப்பட்டு முழுமையாக பணிகள் நிறைவடைந்து இந்த ஆண்டு இறுதிக்குள் தனியார் ரயில்கள் செயல்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.