துபாய், அபுதாபி, சுவிட்சர்லாந்து நாடுகளை தொடர்ந்து ஜெர்மனியில் தொழில் முதலீடுகளை ஈர்க்கிறது தமிழ்நாடு.
சுவிட்சர்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் நேற்று சென்னை திரும்பி இருந்தார். இந்நிலையில் வரும் ஜூலை மாதம் தொழில் வளர்ச்சி மற்றும் முதலீடு குறித்த மாநாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகளை பார்வையிடுவதற்காக நிதித்துறை அமைச்சர் கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் இருந்து வருகிறார்.
இப்படியாக தமிழ்நாடு தொடர்ந்து தொழில் முதலீடுகளில் தன் முழு கவனத்தை செலுத்தி வரும் இந்நிலையில், ஜெர்மனியில் வரும் மே 30 முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை நடைபெறும் ’Hannover Messe - 2022’ என்ற தொழில் கண்காட்சியில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் நிகழ்வில் அரங்கு அமைக்கின்றது தமிழ்நாடு அரசு.
தொடர்புடைய செய்தி... முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் லண்டன் பயணம்: விரைவில் தயாராகிறது பயணத்திட்டம்!
ஆற்றல், உற்பத்தி, நெட்வொர்க்கிங், லாஜிஸ்டிக் துறைகளில் முதலீட்டை ஈர்க்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் அலுவலர்கள், தொழில்துறை உயர் அலுவலர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.