எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 19ல் வெளியாகிறது

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 19ல் வெளியாகிறது
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 19ல் வெளியாகிறது
Published on

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி காலை வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் வரும் 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கு SMSல் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறுகூட்டலுக்கு வரும் 19 ஆம்

தேதி முதல் 22 ஆம் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க தமிழ் மற்றும் ஆங்கில பாடத்துக்கு தலா ரூ.305 ஆகவும் மற்ற பாடங்களுக்கு தலா ரூ.205 ஆகவும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மே 23 ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம். 10 ஆம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு ஜூன் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு போல 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளிலும் ரேங்க் முறை பின்பற்றப்படாது என்றும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் ரேங்க் முறை கைவிடப்படுவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதனால் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படாது. தேசிய அளவிலான தேர்வுகளைக் கருத்தில் கொண்டு பிளஸ்-1 வகுப்புக்கும் அடுத்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com