கொரோனா அச்சுறுத்தல்: தமிழகத்தில் கண்காணிப்பில் இருக்கும் 1,080 பேர்!

கொரோனா அச்சுறுத்தல்: தமிழகத்தில் கண்காணிப்பில் இருக்கும் 1,080 பேர்!
கொரோனா அச்சுறுத்தல்: தமிழகத்தில் கண்காணிப்பில் இருக்கும்  1,080 பேர்!
Published on

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக பல்வேறு நாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருகை தந்த 1080 பேரின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்களில், அனைத்து பயணிகளும் தெர்மல் ஸ்கிரினிங் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். நேற்றுவரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 106 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இவற்றில், 60 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவற்றில் 56 நபர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 பேரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்று பேரின் பரிசோதனை நிறைவடையவில்லை எனவும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

இவை தவிர, பல்வேறு நாடுகளில் இருந்து தமிழகம் வந்த ஆயிரத்து 77 பேர் 28 நாள்களுக்கு தங்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதில், அதிகபட்சமாக சென்னையில் 372 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக ராமநாதபுரத்தில் 60 பேரும், கோவையில் 58 பேரும், தஞ்சை மற்றும் நாகையில் தலா 50 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டுமெனவும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்யவும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என தமிழக சுகாதாரத் துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com