மகா விஷ்ணு
மகா விஷ்ணுpt web

பள்ளியில் மூடநம்பிக்கை பேச்சு.. அடுத்தடுத்து வந்த எதிர்ப்புகள்.. தற்போது வரை நடந்தது என்ன?

சென்னை அசோக் நகர் பள்ளியில் தன்னம்பிக்கை பேச்சாளர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முழுவிபரம் என்ன?
Published on

செய்தியாளர் ராஜ்குமார்

அறிவியலுக்கு எதிராக மோட்டிவேஷன்

சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தின் பின்புறம் இருக்கக்கூடிய ஆடிட்டோரியத்தில், மோட்டிவேஷனல் ஸ்பீச் நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்நிகழ்வில் பேசிய மகா விஷ்ணு, ஆன்மிகம் மற்றும் மூடநம்பிக்கை குறித்தான கருத்துகளை பேசியுள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. குறிப்பாக, அறிவியலுக்கு எதிராக பேசுகையில், சங்கர் என்கிற மாற்றுத்திறனாளி ஆசிரியர் அதை எதிர்த்து குரல்கொடுத்துள்ளார். அதற்கு பதிலளித்த மகா விஷ்ணு, ஆசிரியர்களையும், பாடத்திட்டத்தையும் அவமதிக்கும் வகையில் பதிலளித்துள்ளார்.

அசோக் நகர்
அசோக் நகர்முகநூல்

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய மாணவர் சங்கத்தினர், தலைமை ஆசிரியர், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டார்கள். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

மகா விஷ்ணு
வேலூர் | எருக்கம் பால் ஊற்றி கொலை செய்யப்பட்ட பெண் குழந்தை? - ஒன்றும் தெரியாததுபோல் நாடகமாடிய தந்தை!

முதற்கட்ட நடவடிக்கையாக தலைமையாசிரியர் இடமாற்றம்

இந்நிலையில் இந்நிகழ்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியரே முழுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். யாரை பள்ளி வளாகத்தினுள் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும் என்பது தொடர்பாக உரிய முறையில் முடிவெடுக்க வேண்டும். தற்போது நடந்த விவகாரம் தொடர்பாக 3 நாட்களுக்குள் அனைத்து விதமான விசாரணையையும் நடத்த வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட நடவடிக்கையாக அசோக் நகர் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி காவல்துறையில் புகார் அளிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியிருந்தார்.

தொடர்ச்சியாக காவல்துறையும் உதவி ஆணையர் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மறுபுறம் மாற்றுத்திறனாளிகள் சங்கமும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மகா விஷ்ணு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மாற்றுத்திறனாளி ஆசிரியரை அவமதிக்கும் வகையில் பேசியிருப்பதாக மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். சைதாப்பேட்டை காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மகா விஷ்ணு
உ.பி.| பள்ளியில் பிரியாணி சாப்பிட்ட 3ஆம் வகுப்பு மாணவர்.. தனியறையில் பூட்டிய தலைமை ஆசிரியர்!

பள்ளியின் வளாகத்திற்கு உள்ளேயே வந்து ஆசிரியரை அவமதிக்கும் வகையில் அவர் பேசியதற்கு தனியாக காவல்நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com