தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 7 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் மாதத்தில் நிறைவுபெற்ற நிலையில் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணி அளவில் வெளியாகியுள்ளது.
அம்முடிவுகளை, குறுஞ்செய்தி வாயிலாகவும், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tnresults.nic.in என்ற தளத்திலும், www.dge.tn.gov.in தளத்திலும் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். வலைதளங்கள் மூலம் தேர்வு முடிவுகளை அறியும் மாணவர்கள் தங்கள் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.
புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் 94.56 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்ற அறிவிப்பினை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட சற்று அதிகம். மேலும், இந்த ஆண்டும் வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
100% தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளிகளின் எண்ணிக்கை - 397
100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை - 2,478
அரசுப்பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 91.32%
அரசு உதவிப்பெறும் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 95.49%
தனியார் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 96.7%
மகளிர் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 96.39%
ஆண்கள் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 86.96%
இருபாலர் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 94.7%
பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.