தமிழக MPக்களால் ஒரு பைசா கூட பிரயோஜனம் இல்லை – அண்ணாமலை பேச்சு

கொள்ளையடிப்பதற்கும் கமிஷன் பெறுவதற்காகவே INDIA கூட்டணி அமைத்துள்ளனர் எனவும், பத்தாண்டு காலத்தில் தமிழகத்தில் இருந்து சென்ற எந்த ஒரு எம்.பி.யும் ஒரு பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லை என அண்ணாமலை பேசினார்.
Annamalai
Annamalaifile
Published on

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள தம்மம்பட்டியில் பாஜக சார்பில் என் மண் என் மக்கள் நடைபயண யாத்திரை நடைபெற்றது. அதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார். அப்போது....

தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஆரம்பித்து விட்டது. .திமுக ஆட்சி பொறுப்பேற்று 31 மாதங்கள் ஆகிய நிலையில் 511 தேர்தல் வாக்குறுதியில் 20 தேர்தல் வாக்குறுதியை கூட நிறைவேற்ற வில்லை. ஆனால் முதல்வர் 99 சதவீத வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என கூறுகிறார். நான் பல இடங்களில் கூறியுள்ளேன் பொய் பேசுவது ஒரு வியாதி. முதல்வருக்கு வந்திருப்பது வியாதி தூக்கமின்மை அவரே கூறியுள்ளார். எனவே முதல்வர் நன்றாக தூங்கினால் உண்மையை பேச ஆரம்பித்துவிடுவார்.

cm stalin
cm stalinfile

இது போன்ற மோசமான ஆட்சியை இந்திய வரலாற்றிலேயே யாரும் பார்த்திருக்க முடியாது:

ஊழல் செய்வது மட்டுமே அமைச்சர்களின் முழு வேலையாக உள்ளது. 35 அமைச்சர்களில் 11 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு அமைச்சர் புழல் சிறையில் உள்ளார். இன்னொரு அமைச்சர் 20 நாட்களில் புழல் சிறைக்கு செல்வார். இது போன்ற மோசமான ஆட்சியை இந்திய வரலாற்றிலேயே யாரும் பார்த்திருக்க முடியாது. கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் பொன் கௌதம் சிகாமணியின் ஐந்தாண்டு கால சாதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடைய பெருமையை பேசியது மட்டும்தான். தொகுதி மக்களின் பிரச்னைகளை பற்றியோ அவற்றைத் தீர்ப்பது பற்றியோ பேசியதில்லை.

தமிழகத்தில் உள்ள எந்த எம்.பி.யும் ஒரு பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லை:

இந்த நடைபயண யாத்திரையில் ஒருபுறம் திமுக ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும் மறுபுறம் ஒன்பது ஆண்டுகால பாஜக ஆட்சியில் சாதனைகளை எடுத்துக் கூற வேண்டும் என்பதே நோக்கம். இன்னும் இந்த நாட்டில் பல்வேறு பணிகள் செய்ய வேண்டி உள்ளதால் மீண்டும் ஐந்தாண்டு ஆட்சியை கேட்கிறோம். பத்தாண்டுகளாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் உள்ள எந்த எம்.பி.யும் ஒரு பைசாவுக்கு கூட பிரயோஜனம் இல்லை. பாராளுமன்றத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன்பு அமர்ந்து போராட்டம் பண்ணுவது. பிரதமர் மோடியை திட்டுவது உள்ளிட்டவை மட்டுமே முழுநேர வேலையாக 39 எம்பி-களும் வைத்துள்ளனர்.

india alliance
india alliancefile

ஊழல் என்ற பேச்சுக்கே பாஜக ஆட்சியில் இடமில்லை:

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் இந்தியா வளர்ச்சிக்கான தேர்தல், இந்தியா அடுத்த கட்ட வல்லரசாக மாறுவதற்கான தேர்தல். இவ்வளவு நாள் செய்துள்ள சாதனைகளை இந்தியா என்ற கூடாரம் அந்த கூட்டை கலைக்கக் கூடாது என்பதற்காக. நேர்மையான ஆட்சி நடத்தியுள்ளோம். ஊழல் என்ற பேச்சுக்கே பாஜக ஆட்சியில் இடமில்லை. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளை பாருங்கள் சுயநலம் என்ற ஒற்றை நோக்கத்திற்காகவே கூட்டணி சேர்ந்துள்ளனர். குடும்ப ஆட்சி என்ற வார்த்தைக்கு சேர்ந்துள்ளனர். 45 லட்சம் கோடி இந்தியா பட்ஜெட் உள்ள நிலையில், ஒரு பைசா கூட யாரையும் எடுக்க விடாமல் யாரையும் நம்பாமல் நேரடியாக பொதுமக்களுக்கு சென்றடைய பிரதமர் வழிவகை செய்துள்ளார்.

ஒரு ரூபாய் லஞ்ச ஊழல் இல்லாமல் சிறப்பான ஆட்சியை பிரதமர் கொடுத்துள்ளார் இந்தியா கூட்டணி கமிஷன் அடிப்பதற்கும் கொள்ளையடிப்பதற்கும் கூட்டணி வைத்துள்ளனர். காய்ந்து போன மாடுகளாக இந்தியா கூட்டணி உள்ளனர். என அண்ணாமலை பேசினார்.

செய்தியாளர்: ரவி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com