முல்லை பெரியாறு அணையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் குழு நேரில் ஆய்வுசெய்து வருகிறது.
அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பி.மூர்த்தி, சக்கரபாணியும் படகில் சென்று முல்லை பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அணையின் நீர்மட்டம் 138.50 அடியை கடந்துள்ள நிலையில் இந்த ஆய்வு நடைபெற்று வருகிறது. அணை நீர்மட்டம் 138.50 அடி வரை வரும் 11ம் தேதி வரை நிலைநிறுத்திக் கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், கேரளாவிற்கு உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது தமிழக விவசாயிகளிடையேயும் பொதுமக்களிடையேயும் எதிர்ப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.