மே 24ம் தேதி தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வு கூட்டம்

மே 24ம் தேதி தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வு கூட்டம்

மே 24ம் தேதி தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வு கூட்டம்
Published on

தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் வரும் 24ஆம் தேதி நடைபெறவுள்ளது. கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையில் நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கடந்த மார்ச் 15ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் 22ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடத்தப்‌பட்டு, அதன் பின்னர் தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி, துறை ரீதியான நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் பெற தமிழக சட்டப்பேரவை வரும் 29ஆம் தேதி கூடுகிறது. இந்த நிலையில் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவு செய்ய அலுவல் ஆய்வுக் குழு வரும் 24ஆம் தேதி கூடுகிறது. 

எந்தெந்த தேதிகளில் எந்த துறைகளின் மானிய கோரிக்கை குறித்து விவாதிப்பது என்பன உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படவுள்ளது. 24ஆம் தேதி காலை 11 மணிக்கு தமிழக சட்டபேரவை தலைவர் தனபால் தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் அவை முன்னவர், எதிர்கட்சி தலைவர், சட்டமன்ற கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள்  பங்கேற்க உள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com