பேரவையில் சபாநாயகர் அப்பாவு - ஆளுநர் ஆர்.என்.ரவி
பேரவையில் சபாநாயகர் அப்பாவு - ஆளுநர் ஆர்.என்.ரவிபுதிய தலைமுறை

🔴 LIVE | TN ASSEMBLY | ஆளுநர் உரையை அப்படியே பதிவேற்ற தீர்மானம்!

தமிழக அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார்.

பேரவை நேரலை காணொளி :

சட்டப்பேரவை தொடக்கம்

நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது.

“தார்மீக அடிப்படையில் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” ஆளுநர்

நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது.

இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று (12/02/2024) ஆளுநர் உரையுடன் தொடங்குவதாக இருந்தது. கடந்த ஆண்டு ஆளுநர் சில வார்த்தைகளை நீக்கியும் சில வார்த்தைகளை சேர்த்தும் பேசியதால் சர்ச்சை எழுந்த நிலையில் இந்த ஆண்டு ஆளுநர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் உரையை முடிக்காமல் 2 நிமிடங்களிலேயே புறக்கணித்தார் ஆளுநர். உரையின் தொடக்கத்தில் தேசிய கீதத்தை இசைக்கவில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளார் ஆளுநர்.

மேலும் “அரசின் உரையில் உள்ள பல பகுதிகளை தார்மீக அடிப்படையிலும், உண்மையின் அடிப்படையிலும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் நான் அந்த அறிக்கையை படிக்கவில்லை..” என்று குறிப்பிட்டிருக்கிறார் ஆளுநர். தொடர்ந்து சபாநாயகர் உரையை வாசிக்கிறார். அதை ஆளுநர் அமர்ந்து கேட்டுக்கொண்டுள்ளார்.

சிஏஏ அமல்படுத்தப்படாது -தமிழ்நாடு அரசு உறுதி

ஆளுநர் உரையை வாசித்த அப்பாவு, “தமிழ் மொழி அல்ல; நம் உயிர். பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு திறம்பட செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சிஏஏ சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

மேகதாது அணை கட்டுவதை தடுக்க அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்போம். பண வீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு திறம்பட செயல்படுகிறது. சென்னையில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடே அதற்கு சாட்சி. வேளாண் வளர்ச்சி மேம்பட பல்வேறு முன்னோடி திட்டங்களை தமிழ்நாடு அறிவித்துள்ளது” என உரையில் இருந்தவற்றை குறிப்பிட்டார்

வெளியேறினார் ஆளுநர்!

ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முழுமையாக உரையாற்றாமல் பாதியிலேயே உரையை நிறுத்தியிருந்தார். தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு அந்த உரையின் தமிழாக்கத்தை வாசித்தார்.

அப்போது அவர், “ஆளுநர் ஒப்புதல் பெற்றபிறகே உரை தயாரிக்கப்பட்டது. சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல” என்று கூறினார். இதையடுத்து ஆளுநருக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் ஆளுநர் அங்கிருந்து புறப்பட்டு எழுந்து சென்றார்.

”நாட்டின் பணவீக்கத்தை விட தமிழ்நாட்டின் பணவீக்கம் குறைவு” - சபாநாயகர் அப்பாவு

உரையை வாசித்த சபாநாயகர் அப்பாவு, “கடந்த 10 ஆண்டுகளில், நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் ஆற்றல் மையமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. நாட்டின் நிலப்பரப்பில் 4 சதவீதத்தையும், மக்கள் தொகையில் 6 சதவீதத்தையும் கொண்டுள்ள நமது மாநிலம் இந்திய பொருளாதாரத்தில் 9 சதவீதத்திற்கும் அதிகமான பங்கினை அளிக்கிறது.

2022 - 2023 ஆம் ஆண்டின் வளர்ச்சியின் 7.2% நிலையான வளர்ச்சி வீதத்தை விஞ்சி நமது மாநிலத்தின் பொருளாதாரம் 8.19% ஆக உயர்ந்துள்ளது. அதேவேளையில் சராசரி பணவீக்கத்தைப் பொறுத்தவரை 2022 - 2023 ஆம் ஆண்டில் நாட்டின் 6.65% பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டின் பணவீக்கம் 5.97% ஆக உள்ளது.

இந்திய நாட்டை விட தமிழ்நாடு வேகமாக வளர்ச்சி அடைவதோடு, அதேகாலக்கட்டத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதிலும் நமது மாநிலம் சிறந்து விளங்குவதை இது மெய்ப்பிகிறது” என்றார்.

ஆளுநர் உரையை அப்படியே பதிவேற்ற தீர்மானம்!

ஆளுநர் உரையை அப்படியே பதிவேற்றம் செய்ய வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய கீதம் குறித்து ஆளுநர் ரவி பேசியது அவை குறிப்பில் இடம் பெறாது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

“சவார்க்கர், கோட்சே வழிவந்தவர்களுக்கு சளைத்ததல்ல தமிழ்நாட்டு சட்டமன்றம்” சபாநாயகர் அப்பாவு

தனது உரையை முடித்த பின் பேசிய சபாநாயகர் , “ஜனகனமன பாடியிருக்க வேண்டும் என ஆளுநர் சொன்னார். எல்லோருக்கும் நிறைய கருத்துகள் இருக்கிறது. அதையெல்லாம் பேசுவது மரபல்ல. உங்கள் மனதில் இருப்பதை நீங்கள் சொன்னீர்கள். எங்கள் மனதில் இருப்பதை நாங்கள் சொல்லலாம் அல்லவா. இவ்வளவு பெரிய புயல் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஒரு பைசா கூட நிதி கொடுக்கவில்லை. பல லட்சம் கோடி ரூபாய் பிஎம் கேர் ஃபண்டில் உள்ளது. ஒரு 50 ஆயிரம் கோடி ரூபாயை ஐயா வாங்கித் தந்தால் நன்றாக இருக்கும் என்று நான் கேட்கலாமே. சவார்க்கர் வழி வந்தவர்களுக்கும், கோட்சே வழி வந்தவர்களுக்கும் சற்றும் சளைத்தவர்கள் அல்ல தமிழ்நாட்டு சட்டமன்றம்” என தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com