தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம்; அமைப்பு சார்ந்த நிறுவன தொழிளாலர்களுக்கான திட்டங்கள்!

தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியத்தில் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான திட்டங்கள்.
தொழிலாளர் நல வாரியம்
தொழிலாளர் நல வாரியம்pt web
Published on

அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம் 1975 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டிருந்தது. நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் வேலையளிப்பவர்களிடம் இருந்து பெறப்படும் தொழிலாளர் நலநிதியின் பங்குத் தொகை மூலம் பல்வேறு நலத்திட்ட பயன்கள் மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி தையற்பயிற்சி வகுப்புகள், குழந்தைகள் காப்பகம், கல்வி உதவித்தொகை, கல்வி ஊக்கத்தொகை, புத்தகங்கள் வாங்க உதவித்தொகை, அடிப்படைக் கணினி பயிற்சி, மூக்குக் கண்ணாடி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை போன்ற பல்வேறு பிரிவுகளில் உதவிகள் வழங்கப்படுகிறது.

மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற வேண்டுமானால், தொழிலாளர் நல நிதிக்கு சந்தா செலுத்தி இருக்க வேண்டும் என்பதும் தொழிலாளியின் மாத ஊதியம் ரூ.25 ஆயிரத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனைத் தாண்டி குறிப்பிட்ட திட்டங்களுக்கு தனிப்பட்ட வரையறைகளும் உண்டு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com