"போதைப் பொருள் சேமிப்புக் கிடங்காக தமிழ்நாடு மாறி வருகிறது" - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

போதைப் பொருள் சேமிப்புக் கிடங்காக தமிழ்நாடு மாறி வருகிறது. ஐந்து ஆண்டுகளில் கனிமொழி எம்.பி. செய்த சாதனை என்ன? அவருடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ pt desk
Published on

செய்தியாளர்: மணிசங்கர்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு பேசினார்.

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ pt desk

அவர் கூறியதாவது, “போதைப்பொருள் நடமாட்டம் மட்டுமின்றி போதைப்பொருள் கிடங்காக தமிழ்நாடு மாறி வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தாலே தீவிரவாதம் வரும், சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகும். ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தியவர் திமுகவைச் சேர்ந்த ஜாபர் சாதிக், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதியுடன் புகைப்படம் எடுத்துள்ளார். உதயநிதிக்கும், ஸ்டாலினுக்கும் போதைப் பொருள் கடத்தலில் பங்குண்டா? இதை நாங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். பிஜேபி பார்த்துக் கொள்ளும். மோடி பார்த்துக் கொள்வார்.

தூத்துக்குடி எம்.பி. கனிமொழி இந்த ஐந்தாண்டுகளில் என்ன சாதனை செய்துள்ளார். அவருடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார். நாடாளுமன்ற உறுப்பினர் என்ன சாதனை செய்தார் என்று பட்டியல் போட்டு சொல்ல முடியுமா? இந்த ஆட்சி வந்ததிலிருந்து எல்லாவற்றிற்கும் கருணாநிதி பெயரை மட்டும்தான் வைக்கிறார்கள். நாம் அசந்தால் நமது வீட்டில் கூட கலைஞர் இல்லம் என எழுதி விடுவார்கள் இந்த ஆட்சியே ஒரு விளம்பர ஆட்சி... இந்த ஆட்சிக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும்...

CM Stalin
CM Stalinpt desk

கடந்த அதிமுக ஆட்சியில் தாமிரபரணி நதி - வைப்பாறு இணைப்பு திட்டத்திற்கு அரசாணை வெளியிட்டும் இந்த மூன்றாண்டு கால திமுக ஆட்சியில் நிறைவேற்றாதது ஏன்? என்று தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வருபவரிடம் கேளுங்கள்” என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com