மீண்டும் பொதுமுடக்கம்: தீவிர கண்காணிப்பில் சென்னை!!

மீண்டும் பொதுமுடக்கம்: தீவிர கண்காணிப்பில் சென்னை!!
மீண்டும் பொதுமுடக்கம்: தீவிர கண்காணிப்பில் சென்னை!!
Published on

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், சென்னை பெருநகர காவல் பகுதி மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் சில பகுதிகளில் ஜூன் 19 முதல் 12 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.அதன்படி நள்ளிரவு முதல் இந்த பொதுமுடக்கம் அமலுக்கு வந்துள்ளது.

சென்னையில் முழு பொதுமுடக்கத்தை கண்காணிக்க 18,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். மேலும் நோய்தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற வகையில் அரசு எடுத்துள்ள முடிவுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார். மக்கள் வாகனங்களில் செல்லமால் நடந்து சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

அத்தியாவசிய தேவை இல்லாமல் வருபவர்களை கண்காணிக்க ட்ரோன் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார். பொதுமுடக்கத்தை கண்காணிக்க சென்னை நகருக்குள்ளேயே 288 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தேவையின்றி சென்றால் வாகன பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

அண்ணா சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பிராதான சாலைகள் கடந்த முறை பொதுமுடக்கத்தைப்போல இந்த முறையும் மூடப்படும் என்றார். திருமணம், அவசர மருத்துவ தேவை தவிர மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே பெற்ற பாஸ் செல்லாது எனவும், அந்த பாஸை புதுப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார். சென்னையின் உட்புற பகுதிகளிலும் இந்தமுறை சோதனையை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com