அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவனைகளில் பணியாற்றும் தற்காலிக செவிலியர்கள் கைது செய்யப்பட்ட பிறகும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
மருத்துவ தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு 8 ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் பணியாற்றினாலும், ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியமே வழங்கப்படுவதாக கூறி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதுமிருந்து வந்துள்ள 1,500க்கும் அதிகமான செவிலியர் இன்று காலை அண்ணாசாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தி டி.எம்.எஸ் வளாகத்தில் அடைத்து வைத்துள்ளனர். அங்கும், செவிலியர் தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.