ஆபத்தான நாய்களுக்குத் தடை விதித்து தமிழக அரசு உத்தரவு!

கீழ் குறிப்பிடப்படும் 23 வகை நாய்களை வளர்ப்பு பிராணியாக வைத்திருப்போர், உடனடியாக அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது
தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு
தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்புபுதிய தலைமுறை
Published on

23 நாய் இனங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ள தமிழக அரசு, அவ்வகை நாய்களை வைத்திருப்போர் அவற்றுக்கு உடனடியாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது.

நாய்கள்
நாய்கள்புதிய தலைமுறை

அதில்,

  • PITBULL TERRIER,

  • TOSA INU,

  • AMERICAN STAFFORDSHIRE TERRIER,

  • FILA BRASILEIRO,

  • DOGO ARGENTINO,

  • AMERICAN BULL DOG

ஆகியவை ஆபத்தானவை என பட்டியலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு
“ராட்வைலர் நாய்கள் கடித்தால் கை எலும்பே நொறுங்கி விடும்; அதனால்..” விலங்கு நல ஆர்வலர்கள் சொல்வதென்ன?
  • BOESBOEL,KANGAL,

  • CENTRAL ASIAN SHEPHERD DOG,

  • CAUCASIAN SHEPHERD DOG,

  • SOUT RUSSIAN,

  • SHEPHERD DOG,

  • TORNJAK SARPLANINAC,

  • JAPANESE TOSA,

  • AKITA MASTTIFFS,

  • ROTTWEILER,

  • TERRIERS,

  • RHODESIAN RIDGEBACK

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு
சென்னை | சிறுமியை கொடூரமாக கடித்த நாய்கள்... நடுக்கத்தோடு பேசிய சிறுமியின் தந்தை!
  • WOLF DOGS,

  • CANARIO,

  • AKBASH,

  • MOSCOW GUARD,

  • CANE CORSO,

  • BANDONG

ஆகியவையும் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்வது, வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வது உள்ளிட்ட இந்த நாய் இனங்களின் அனைத்து விதமான பயன்பாடும் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது இந்த நாய்களை வளர்ப்பு பிராணியாக வைத்திருப்போர், உடனடியாக அவற்றுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, அவை இனப்பெருக்கம் செய்யாமல் தடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com