“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' எனும் திட்டத்தின் கீழ் கலாச்சார பரிமாற்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பீகாரில் இருந்து தமிழகம் வந்துள்ள மாணவர்களிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ''இந்தியாவில் பழமை வாய்ந்த மொழிகளில் ஒன்றாக தமிழும், கலாசாரம் கொண்ட ஒரு மாநிலமாக தமிழ்நாடும் திகழ்கிறது. இந்தியாவின் பழமைவாய்ந்த மொழி எதுவென கேட்டால் ஒரு சிலர் தமிழ் என்றும், ஒரு சிலர் சமஸ்கிருதம் என்றும் கூறுவார்கள். ஆனால் அதற்கு தற்போது வரை பதில் இல்லை. உண்மையில் இரண்டு மொழிகளில் இருந்தும் பிற மொழிகளுக்கு வார்த்தைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
பாரத நாடு என்பது எந்த ஒரு அரசாரலும் உருவாக்கப்படவில்லை. 1947-லிலும் உருவாகவில்லை. அது 2,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. பல ஆயிரம் ஆண்டுகள் முன்புகூட இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் இங்கு இருந்து மக்கள் சென்று வசிக்கவும், வியாபாரம் செய்யவும், படிக்கவும் பயணம் செய்து உள்ளனர். அப்போது அதற்கு யாரிடமும் அனுமதி வேண்டும் சூழல் இல்லை. ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பின் மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. அதன்பின் நடைபெற்ற அரசியல் காரணமாகவே மொழி அடிப்படையில் பிரிந்து உள்ளோம்
பாரதம் என்ன என்பதை நாம் மறந்து வருகிறோம். பாரதத்தின் உயிர் என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக இருக்கும் கலாச்சார ஒற்றுமைதான் . மேலும் முந்தைய காலங்களில் மக்கள் வடஇந்தியாவில் இருந்து தென் இந்தியாவிற்கும், தென் இந்தியாவில் இருந்து வட இந்தியாவிற்கும் மக்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது ஆன்மிக பயணம் மேற்கொண்டனர். எந்த ஒரு சிரமும் இல்லாமல் அந்த பயணங்கள் அமைந்தன.
அந்த காலத்தில் இங்கு இருந்தவர்கள் ஹிந்தி பேசவில்லை. தமிழ்தான் பேசி வந்தனர். இங்கு வந்த மக்களை வரவேற்றனர். அதேபோல இங்கு இருந்து அங்கு சென்ற மக்களை அங்கிருந்த மக்களை வரவேற்றனர். அதுதான் பாரதத்தின் அடிப்படையாக இருந்தது. அதனை மீட்க வேண்டும்” என கூறினார்.
பின்னர் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார் ஆளுநர்.
தமிழ்நாட்டில் உங்களுக்கு பிடித்த இடம் எது?
“உங்கள் உடலில் பிடித்த பாகம் என்ன என கேட்டால் எப்படி பதில் அளிக்க முடியும்? அதுபோலத்தான் தமிழகத்தில் எனக்கு எந்த இடம் பிடிக்கும் என்ற கேள்வி. தமிழகத்தில் எந்த பகுதிக்கு சென்றாலும் அன்பு கிடைக்கும். ஆகவே அனைத்து இடங்களும் எனக்கு பிடிக்கும். மேலும் சிறு வயது முதல் விவேகானந்தர் என்னுடைய IDOL ஆக இருந்தார்”
உங்கள் வாழ்வின் கடினமான காலம் மற்றும் சந்தோஷமான காலம் எவை?
“நான் படித்த காலத்தில் மின்சாரம் இல்லை; சாலைகள் இல்லை. 8 கிலோமீட்டர் வயலில் நடந்தே பள்ளிக்கு செல்வேன். மதியம் வெயிலில் பள்ளி முடிந்து மீண்டும் அவ்வளவு தூரம் நடந்து செல்வேன். இன்று நினைத்து பார்த்தால் அது கடினமான பாதையாக தெரிகிறது. ஆனால் அன்று அது கடினமாக தெரியவில்லை”
வாழ்கையில் வெற்றி பெரும் நேரத்தில் தோல்வி அடைந்தால், எப்படி அதில் இருந்து மீண்டு வந்து முன்னேற வேண்டும்?
வாழ்வில் தோல்வி என எதுவும் கிடையாது. அது சறுக்கல்கள் மட்டுமே. முன்னேற வேண்டும் என நினைப்பது நம்மிடம் மட்டுமே உள்ளது. அதேபோல சறுக்கல்கள் அடையாத நபர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.
நான் இளம் வயதில் திருமணம் செய்து கொண்டேன். எனது திருமணம் குழந்தை திருமணம். அப்போது எனது மனைவி கல்லூரிக்கு செல்லவில்லை. ஆனால் எனக்கு பக்க பலமாக இருந்தார். நான் உலகத்தையே எதிர்க்கும் திறனை எனக்கு அவர் அளித்தார். நான் எப்போது வீடு திரும்பினாலும் எனக்கு பக்கபலமாக இருந்தார். அதுபோல குடும்பத்தினர் நம் பக்கம் இருந்தால் நம்மால் சாதிக்க முடியும்.