``லால் பகதூர் சாஸ்திரிக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை”- ஆளுநர் ஆர்.என்.ரவி

``லால் பகதூர் சாஸ்திரிக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை”- ஆளுநர் ஆர்.என்.ரவி
``லால் பகதூர் சாஸ்திரிக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை”- ஆளுநர் ஆர்.என்.ரவி
Published on

சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் புதிதாக நிறுவப்பட்ட லால் பகதூர் சாஸ்திரியின் சிலையை திறந்து வைத்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் புதிதாக அமைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் முழு உருவ வெண்கல சிலையை இன்று காலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.திறந்து வைத்தார். ஆளுநர் திறந்து வைத்த லால்பகதூர் சாஸ்திரி சிலையின் உயரம் 9.5 அடியாகும். இந்த சிலையின் மொத்த எடை ஒட்டுமொத்தமாக 850 கிலோ ஆகும். இதன் மதிப்பு ரூ.15 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ரவி கூறுகையில், ''இந்த விழாவில் கலந்து கொள்வதை, மிக கவுரவமாக கருதுகிறேன். லால் பகதூர் சாஸ்திரியின் முழு உருவ சிலையை நிறுவ நடவடிக்கை எடுத்த அனைத்து தரப்பினருக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன். லால் பகதூர் சஸ்திரியை பொறுத்தவரை எளிமைக்கு பெயர் பெற்றவர். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களை சந்தித்தாலும் தனது பொதுவாழ்வு கடமையில் தன்னை அர்பணித்தவர். இந்திய நாட்டுக்காக பல்வேறு பங்களிப்புகளை அளித்த இந்த தலைவருக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஜெய் ஜவான், ஜெய் கிஷான் முழக்கங்களை தந்தவர் இவர். நாட்டின் தேவைகளுக்கு முதன்மையளித்தவர் இவர். நமது நாட்டின் தேவைகள் தொடர்பாக தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டவர்.

நமது நாட்டின் மீதான பார்வையில் மாற்றம் கொண்டு வந்தவர் லால் பகதூர் சாஸ்திரி. நமது நாட்டின் தேவை  உள்ளிட்டவைகளின் பார்வைகளில் மாற்றம் கொண்டு வந்தவர், ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியபோது நமது நாடு அமைதிய என்பதையே முதன்மையாக கருதியது. அமைதி வழியை கடை பிடித்தால் நம் நாடு பாதுகாப்பானதாக இருக்கும் என கருதினோம். இதனால் நமது நாட்டின்  ராணுவத்துக்கு தேவையான விசயங்களை செய்யவில்லை, கருத்தில் கொள்ளவில்லை.

இதனால் நாம் பல்வேறு பகுதிகளை இழந்தோம். குறிப்பாக ஜம்மு-கஷ்மீரின் பல பகுதிகளை இழந்தோம். அதேபோர சியாச்சின் பகுதிகளில் பெரும்பாலானவையை இழந்தோம். மேலும் எதிரிகள் தொடர்ந்து நமது நாட்டின் பகுதிகளை தொடர்ந்து ஆக்கிரமித்து வந்தனர்” என்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் லால் பகதூர் சாஸ்திரி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com