16 வது நிதிக் குழுவிற்கு தமிழ்நாட்டு அரசால் அளிக்கப்பட்ட அறிக்கையின் முக்கியமான அம்சங்கள் என்ன?
மாநில பேரிடர் மேலாண்மை நிதியை 2026-27ம் ஆண்டில் 50% சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் வெளியாகி உள்ளது.
16வது நிதிக்குழுவிற்கு தமிழக அரசால் அளிக்கப்பட்டிருக்கக் கூடிய அறிக்கையின் முக்கிய அம்சங்கள் முழுமையாக வெளியாகி இருக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட ஒரு மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மொத்த உள்நாட்டு புள்ளியில் 8.87 % என்ற பங்களிப்பை தமிழகம் வழங்குகிறது.
மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 31.55 லட்சம் கோடி ரூபாயாக மதிப்பீடு செய்யப்பட்டு இருக்கிறது. இது 2030 ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கான இலக்கு தமிழக அரசினால் நிர்ணயிக்கப்பட்டு அதனை முன்னோக்கி நாம் சென்றுக்கொண்டு இருக்கிறோம். இதைப்பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப் பார்க்கலாம்.