தமிழகத்தில் சாலை வரி உயர்கிறது? - கார், பைக் விலை மேலும் எகிற வாய்ப்பு

தமிழக அரசு சாலை வரி விதிப்பை உயர்த்த இருப்பதால் புதிய வாகனங்களின் விலை அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சாலை வரி உயர்கிறதா?
சாலை வரி உயர்கிறதா?கோப்பு புகைப்படம்
Published on

தமிழகம் முழுவதும் கடந்த 2022-2023 ஆம் ஆண்டில் 14.77 லட்சம் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், 12.47 லட்சம் வாகனங்கள் இரு சக்கர வாகனங்கள் ஆகும். இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் தமிழக அரசு சாலை போக்குவரத்து வரியை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, ரூ.1 லட்சம் வரையிலான வண்டிகளுக்கு 10% வரியும், ரூ.1லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களுக்கு 12% வரியும் விதிக்கப்பட உள்ளது.

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

மேலும், 5 லட்சத்திற்கு குறைவான கார்களுக்கு 12 சாவீதம் வரை வரி உயர்வும் , 5 முதல் 10 லட்சம் வரையிலான கார்களுக்கு 13 சதவீதம் வரை வரி உயர்வும், 10 முதல் 20 லட்சம் வரையிலான கார்களுக்கு 15 சதவீதம் வரையும் அதற்கு மேல் 20 சதவீதம் வரையும் சாலை வரிகள் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி உயர்வு மூலம் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் விலை 5 சதவீதம் வரை உயரும் என்றும், இதனால் அரசுக்கு வரி வருவாய் 6,674 கோடியிலிருந்து கூடுதலாக சுமார் 1,000 கோடி வரை உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சாலை வரி உயர்த்தப்படும் பட்சத்தில் இருசக்கர வாகனங்களின் விலை குறைந்தது 10,000 முதல் 15,000 ரூபாய் வரையிலும் நான்கு சக்கர வாகனங்களின் விலை குறைந்தபட்சம் 50,000 ரூபாய் வரையிலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே பல்வேறு அரசியல் கட்சிகளும் சாலை வரி உயர்வு திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com