தமிழகம் முழுவதும் உள்ள அரசு நகரப் பேருந்துகள் வரும் பொங்கல் பண்டிகை முதல் ரெட் பஸ்களாக மாற்றப்பட உள்ளது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது சென்னையில் அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் ரெட் பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. முதற்கட்டமாக சென்னை நகரப் பேருந்துகளில் 245 பேருந்துகள் சேர்க்கப்பட்டு, விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள நகரப் பேருந்துகளை ரெட் பஸ்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளன.
சிவப்பு வண்ணத்திலான இப்பேருந்துகள், கரூர், பண்ருட்டி, குரோம்பேட்டை மற்றும் பொள்ளாச்சியில் உள்ள அரசுப்பேருந்து கூண்டு கட்டும் இடங்களில் தயாராகி வருகின்றன. தாழ்வான தளம் கொண்ட இந்த ரெட் பஸ்களில் 2-க்கு இரண்டு என்ற முறையில் ஃபைபர் இருக்கைகள் அமைக்கப்படுகின்றன.
முன்புறமும், பின்புறமும் ஏறி, இறங்கும் வகையில் படிகட்டுகள், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் பேருந்துகள் தயாராகின்றன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் வரும் பொங்கலன்று ரெட் பஸ்கள் சேவையை தொடங்கி வைக்க உள்ளனர்.