தமிழ்நாடு
ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர என்ன காரணம்?
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் மாநில அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், “மசோதாக்கள், அரசு உத்தரவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கே அதிகாரம் என்பது உட்பட மொத்தம் 13 மசோதாக்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.