வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை!

வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
வெப்ப அலை மாநில பேரிடராக அறிவிப்பு
வெப்ப அலை மாநில பேரிடராக அறிவிப்புபுதிய தலைமுறை
Published on

வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

வெப்ப அலையால் நேரிடும் மரணங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் மாநில பேரிடர் நிதியில் இருந்து வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள் மற்றும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்குவதற்கும், தண்ணீர் பந்தல்கள் அமைத்து குடிநீர் வழங்குவதற்கும் மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டுதல்களும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

வெப்ப அலை மாநில பேரிடராக அறிவிப்பு
“தாங்கொணா துயர்..” - தவெக மாநாட்டுக்கு சென்று விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு விஜய் இரங்கல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com