தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி
தீபாவளிpt web
Published on

தொடங்கி விட்டது தீபாவளிக் கொண்டாட்டம். துணிக்கடைகள், பட்டாசிக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்பிருந்தே தனியார் பேருந்துகள் பெரும்பாலும் புக்கிங்கில் நிரம்புவிட்டது. ரயில்களைக் சொல்லக்கூட வேண்டாம்.

தீபாவளி
தீபாவளி முகநூல்

பெருவாரியாக மக்கள் ஊர்களை நோக்கி படையெடுத்து செல்வர். அரசு சார்பில் சிறப்புப் பேருந்துகள் விடப்பட்டாலும், தமிழ்நாட்டின் பல இடங்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்களால், பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதும். தீபாவளிக்கு முன் இரு தினங்களும், தீபாவளிக்குப் பின் இரு தினங்கள் என தமிழ்நாடு முழுவதும் அல்லோலகல்லோலப்படும்.

தீபாவளி
தி.மலை: விசிக ஒன்றிய செயலாளர் மர்ம மரணம் - சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்!

இந்நிலையில்தான், அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “இவ்வாண்டு தீபாவளியை 31.10.2024 அன்று கொண்டாடும் பொருட்டு தமது சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்களின் நலனைக் கருத்தில் கொண்டு 01.11.2024 அன்று ஒரு நாள் மட்டும், தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கவும், அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 09.11.2024 அன்று பணி நாளாக அறிவித்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com