‘வீட்டிலிருந்துகொண்டே மீன்கள் வாங்கலாம்’ - அரசின் புதிய செயலி

‘வீட்டிலிருந்துகொண்டே மீன்கள் வாங்கலாம்’ - அரசின் புதிய செயலி
‘வீட்டிலிருந்துகொண்டே மீன்கள் வாங்கலாம்’ - அரசின் புதிய செயலி
Published on

சென்னை மக்கள் வீட்டிலிருந்துகொண்டே மீன்களை வாங்கும் வகையில் புதிய திட்டத்தை மீன்வளத்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில், பொதுமக்களுக்கு பயன் அளித்திடும் வகையில் சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீன் அங்காடிகள் செயல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை பெருநகரத்தின் பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று மீன் மற்றும் மீன் உணவுகளை விற்பனை செய்திட, www.meengal.com என்ற இளையதளம் மற்றும் தொலைபேசி எண் 044 2495 6896 உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் பொது மக்களுக்கான மீன் விற்பனை திட்டத்தினை மேலும் விரிபடுத்திடும் வகையில் ‘இது நம்ம ஊரு மீன்கள்’ என்ற வணிக அடையாள சின்னம் அறிமுக செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி Meengal என்ற செயலியும் பொதுமக்களுக்காக அறிமுகப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்தி சென்னையில் சாந்தோம், தேனாம்பேட்டை, அண்ணா நகர் மற்றும் விருகம்பாக்கம் மீன் அங்காடிகள் மூலம் சுமார் 5 கி.மீ சுற்றளவிற்கு மக்கள் மீன்களை வீட்டிலிருந்தே வாங்கிக்கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மீன்களை வாங்க முடியும் என்றும், ஊரடங்கு காலத்தில் மக்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலையில் இருப்பதால் பிரத்யேகமாக இந்த செயலி வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com