தமிழ்நாடு அரசின் 2015க்கான திரைப்பட விருது - அணிவகுத்த பிரபலங்கள்!

தமிழ்நாடு அரசின் 2015 ஆம் ஆண்டிற்கான திரைப்பட விருது விழா நேற்று நடந்தது.
தமிழ்நாடு அரசின் 2015க்கான திரைப்பட விருது
தமிழ்நாடு அரசின் 2015க்கான திரைப்பட விருதுx page
Published on

தமிழ்த் துறையுலகினருக்கான தமிழக அரசின் 2015 ஆம் ஆண்டின் திரைப்பட விருது வழங்கும் விழாவானது மார்ச் 6, 2024 (நேற்று) அன்று டிஎன் ராஜரத்தினம் கலையரங்கில் நடைப்பெற்றது. அதை பெற்றுக்கொள்ள பல்வேறு பிரபலங்கள் விழா மேடையில் அணிவகுத்தனர். இதில், சினிமாவை தங்களின் கலைத் திறமையின் மூலமாக வளப்படுத்தியவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது.

அப்படியாக 2015 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. அதில் விருது பெற்றவர்களின் பட்டியல் இதோ,

சிறந்த படங்களுக்கான விருது

  • சிறந்த படத்திற்கான முதல் பரிசு- தனி ஒருவன்

  • சிறந்த படம் இரண்டாம் பரிசு- பசங்க 2

  • சிறந்த படம் மூன்றாம் பரிசு- பிரபா

  • சிறந்த படம் சிறப்புப் பரிசு- இறுதிச்சுற்று

  • பெண்களை பற்றி உயர்வாகச் சித்திரிக்கும் படம் (சிறப்புப் பரிசு)- 36 வயதினிலே

  • சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள்:

  • சிறந்த நடிகர் - மாதவன் (இறுதி சுற்று)

  • சிறந்த நடிகை- ஜோதிகா(36 வயதினிலே)

  • சிறந்த நடிகர் சிறப்புப் பரிசு- கௌதம் கார்திக் (வை ராஜா வை)

  • சிறந்த நடிகை சிறப்புப் பரிசுரித்திகா சிங் (இறுதிச்சுற்று)

  • சிறந்த வில்லன் நடிகர் அரவிந்த்சாமி (தனி ஒருவன்)

  • சிறந்த நகைச்சுவை நடிகர் சிங்கம்புலி (அஞ்சுக்கு ஒண்ணு)

  • சிறந்த நகைச்சுவை நடிகை தேவதர்ஷினி (திருட்டுக் கல்யாணம்/36 வயதினிலே)

  • சிறந்த குணச்சித்திர நடிகர் தலைவாசல் விஜய் (அபூர்வ மகான்)

  • சிறந்த குணச்சித்தர நடிகை கவுதமி (பாபநாசம்)

  • சிறந்த இயக்குநர் சுதா கொங்காரா (இறுதிச்சுற்று)

  • சிறந்த கதையாசிரியர் மோகன் ராஜா (தனி ஒருவன்)

  • சிறந்த உரையாடலாசிரியர் இரா.சரவணன் (கத்துக்குட்டி)

  • சிறந்த இசையமைப்பாளர் ஜிப்ரான் (உத்தம வில்லன்/பாபநாசம்)

  • சிறந்த பாடலாசிரியர் விவேக் (36 வயதினிலே)

  • சிறந்த பின்னணிப் பாடகர் கானா பாலா (வை ராஜா வை)

  • சிறந்த பின்னணிப் பாடகி கல்பனா ராகவேந்தர் (36 வயதினிலே)

  • சிறந்த ஒளிப்பதிவாளர் ராம்ஜி (தனி ஒருவன்)

  • சிறந்த ஒலிப்பதிவாளர் ஏ.எல்.துக்காரம்

  • சிறந்த திரைப்பட எடிட்டர்- கோபி கிருஷ்ணா (தனி ஒருவன்)

  • சிறந்த ஆர்ட் டைரக்டர் - பிரபாகரன் (பசங்க 2)

  • சிறந்த சண்டைப் பயிற்சியாளர் -ரமேஷ் (உத்தம வில்லன்)

  • சிறந்த நடன் ஆசிரியர்-பிருந்தா (தனி ஒருவன்)

  • சிறந்த ஒப்பனைக் கலைஞர்- சபரி கிரீஷன் (36 வயதினிலே/இறுதிச்சுற்று)

  • சிறந்த தையற் கலைஞர்-வாசுகி பாஸ்கர் (மாயா)

  • சிறந்த குழந்தை நட்சத்திரம் -மாஸ்டர் நிஷேஸ்

  • சிறந்த பின்னணிக்குரல் (ஆண்)-கௌதம் குமார் (36 வதினிலே)

  • 27சிறந்த பின்னணிக்குரல் (பெண்)-ஆர்.உமா மகேஸ்வரி (இறுதிச்சுற்று)

அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் (2014-2015)

  • சிறந்த இயக்குநர்-கே.மோகன் குமார் (புர்ரா)

  • சிறந்த ஒளிப்பதிவாளர்-விக்னேஷ் ராஜகோபாலன் (கண்ணா மூச்சாலே)

  • சிறந்த ஒலிப்பதிவாளர்-வி.சதிஷ் (கண்ணா மூச்சாலே)

  • சிறந்த படத்தொகுப்பாளர்-ஏ.முரளி (பறை)

  • சிறந்த படம் பதனிடுவர்-வி.சந்தோஷ்குமார் (கிளிக்)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com