மின் கட்டண உயர்வு அமல் - இருமாதங்களில் டான்ஜெட்கோவின் வருவாய் ரூ. 1000 கோடி அதிகரிப்பு

மின் கட்டண உயர்வு அமல் - இருமாதங்களில் டான்ஜெட்கோவின் வருவாய் ரூ. 1000 கோடி அதிகரிப்பு
மின் கட்டண உயர்வு அமல் - இருமாதங்களில் டான்ஜெட்கோவின் வருவாய் ரூ. 1000 கோடி அதிகரிப்பு
Published on

மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தப் பிறகு முதல் இருமாத வசூலில் மட்டுமே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் வருவாய் ரூ.1000 கோடி அதிகரித்துள்ளது.

மின்சாரத் துறை வருவாய் அதிகரித்துள்ள அதேநேரத்தில் வருவாயை அதிகரிப்பது மட்டுமின்றி, வட்டிச் செலவைக் குறைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின்துறைக்கு தற்போது உள்ள சுமார் ரூ.1.45 லட்சம் கோடி மொத்தக் கடனில் 15,000 கோடி ரூபாய் வணிக வங்கிகளிடம் மட்டுமே உள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துடன் வணிக வங்கிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு வட்டியை 12.33% லிருந்து 11% ஆகக் குறைக்க வணிக வங்கிகள் ஒப்புக்கொண்டன. இதன் மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூ.1500 கோடியை மின்துறை சேமிக்க உள்ளது.

"பொதுத்துறை வங்கிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அனைத்து வங்கிகளும் வட்டியைக் குறைக்க ஒப்புக்கொண்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது, இது எங்கள் நிதிக்கு பெரும் ஊக்கமளிக்கிறது" என்று டான்ஜெட்கோவின் மூத்த அதிகாரி கூறியுள்ளார். பொதுத்துறை வங்கிகள் தவிர, REC மற்றும் PFC நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. "இந்த இரண்டு நிறுவனங்களும் வட்டி விகிதத்தை குறைக்க ஒப்புக்கொண்டால், நாங்கள் சில கடன்களை மெதுவாக தீர்க்க முடியும்," என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுதவிர, மின்சாரம் வாங்கும் முறையையும் டான்ஜென்கோ மாற்றியுள்ளது. “சில ஆண்டுகளுக்கு முன்பு, மின்சாரத் தட்டுப்பாட்டைத் தடுப்பதற்காக எல்லா மூலங்களிலிருந்தும் மின்சாரத்தை வாங்கினோம். ஆனால் இப்போது எங்களிடம் ஒரு கொள்கை உள்ளது. ஒவ்வொரு நாளும் மற்ற எல்லா ஆதாரங்களையும் சரிபார்த்த பின்னரே, நாங்கள் மின்சார பரிவர்த்தனையிலிருந்து வாங்குகிறோம், அங்கு அதிக தேவை காரணமாக மின் கட்டணம் அதிகமாக உள்ளது” என்று அந்த அதிகாரி கூறியுள்ளார். இதன் மூலம், 600 கோடி ரூபாய்க்கு குறையாமல் சேமிக்க திட்டமிட்டுள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.

500 கோடிக்குக் குறையாமல் டிஸ்காம் (discom), அதன் தெர்மல் யூனிட் வளாகத்தில் இருந்து சாம்பலை விற்கத் தொடங்கியுள்ளது. தமிழக அரசுக்குச் சொந்தமான சிமென்ட் நிறுவனங்களைத் தவிர அனைத்து சிமென்ட் நிறுவனங்களுக்கும் பறக்கும் சாம்பல் இலவசமாக விற்கப்படுகிறது.

அனைத்து தெர்மல் யூனிட்களும் அதே செலவில் பழுதுபார்க்கப்பட்ட பாகங்களை வாங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது, இதனால் ஒவ்வொரு ஆண்டும் 100 கோடி ரூபாய்க்கு குறையாமல் சேமிக்கப்படும். இதற்கிடையில், நேற்று பேட்டி அளித்த மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டப் பிறகு, மின் வாரியத்தின் மாத வருவாய் ரூ.1,000 கோடியாக அதிகரித்திருந்தாலும், திட்டமிட்டதை விடவும் இது சற்றுக் குறைவுதான்" என்று தெரிவித்திருந்தார்.

மேலும், தமிழக மின்வாரியத்துத்துக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ.19,000 கோடி வருவாய் ஈட்ட வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் தற்போது வரை சில கட்டணங்களை நாங்கள் சில பிரிவுகளுக்கு அறிவிக்காததால், தற்போதைக்கு மாதத்துக்கு மின்வாரியத்துக்கு வருவாய் ரூ.1,000 கோடியாக உள்ளது என்று குறிப்பிட்டிந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com