தமிழ்நாடு நாள் | மெட்ராஸ் மாகாணம் ‘தமிழ்நாடு’ என பெயர் மாறிய வரலாறு தெரியுமா?

ஜூலை 18 ஆம் தேதியான இன்று ’தமிழ்நாடு நாள்' கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடு நாள்
தமிழ்நாடு நாள் Twitter
Published on

ஜூலை 18 ஆம் தேதியான இன்று ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு நாள்
தமிழ்நாடு நாள்

அதில்,

”கடல் கண்டு, மலை கண்டு பயன்கொண்ட தமிழ்நாடு வாழ்க.

களங்கண்டு, கலை கண்டு, கவி கொண்ட தமிழ்நாடு வாழ்க.

உடல் கொண்டு, உரங்கொண்டு, உயிர் கொண்ட தமிழ்நாடு வாழ்க.

ஜூலை 18, தமிழ்நாடு திருநாள் என்று சொல்லும்போதே நம் உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒரு ஆற்றல் பிறக்கிறது.

தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க. தமிழ்நாடு வாழ்க”

என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நாள்
ராமநாதபுரம்: கடலில் வீசும் சூறைக்காற்று... கரையில் காத்திருக்கும் படகுகள் - வேலையிழந்த மீனவர்கள்

இந்த தமிழ்நாடு நாள் எவ்வாறு உருவானது தெரியுமா?

  • காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சங்கரலிங்கனார், சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்கவேண்டும் என்று முதன்முதலில் தொடர் உண்ணாவிரதம் இருந்தார். இதில் 1956-ம் ஆண்டு அக்டோபர் 13 தேதி அவர் உயிர்நீத்தார்.

  • தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 1957-ல் கொண்டுவந்த தீர்மானம் வாக்கெடுப்பு தோல்வி அடைந்துள்ளார்

  • 1961 ஆம் ஆண்டு சோஷலிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை கொண்டு வந்த தீர்மானமும், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பூபேஷ் குப்தாவின் தனிநபர் மசோதாவும், 1963 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மற்றொரு தீர்மானமும் தோல்வி அடைந்துள்ளது.

தமிழ்நாடு நாள்
தமிழ்நாடு நாள்
  • 1967 ஆம் ஆண்டு அண்ணா ஆட்சி பொறுப்பேற்ற பின் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை 'தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • 1968 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்வதற்கான தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு, 1968 நவ.23 ஆம் நாள் தமிழ்நாடு பெயர் மாற்றம் நாடாளுமன்ற மசோதாவில் நிறைவேறியது.

  • 1969 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி சென்னை மாகாணம் “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டப்பட்டது.

  • ஜூலை 18ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மான நாளைக் கொண்டாட வேண்டும் என்று 2021ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததன் அடிப்படையில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு நாளின் வரலாற்றை இன்னும் விரிவாக அறிய கீழே உள்ள காணொளியை பார்க்கவும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com