“அனைத்து மக்களுக்கான அரசு இது”- முதல்வர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரை- முழு விவரம்

“அனைத்து மக்களுக்கான அரசு இது”- முதல்வர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரை- முழு விவரம்
“அனைத்து மக்களுக்கான அரசு இது”- முதல்வர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின உரை- முழு விவரம்
Published on

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 3 சதவிகிதம் உயர்த்தப்படுவதாக நாட்டின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றிவைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்ற வந்த முதலமைச்சருக்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதை செய்தனர். அணிவகுப்பு மரியாதைக்குப் பின்னர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், “எண்ணற்ற தியாகிகள் பெற்றுத் தந்த விடுதலை இது. நாட்டையும் நாட்டு மக்களையும் ஒருமைப்பாட்டையும் வணங்குகிறோம்.

மூவர்ண்ணக் கொடி ஏற்றும்போது தமிழன் என்ற அடிப்படையில் அளவற்ற மகிழ்ச்சி. இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்டது தமிழகம்தான். இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள் பங்கு அளப்பரியது. சிப்பாய் புரட்சிதான் இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கம் என்கின்றனர் சிலர். அடிமைப்படுத்தல் என்று தொடங்கியதும் எதிர்ப்பை தெரிவித்தவர்கள் தமிழர்கள். போராட்டங்களால் ஆங்கிலேயர்களை மிரளச் செய்தது தமிழகமே. வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் ஆங்கிலேயர்களுக்கு பெரும் பிரச்னையானது. விடுதலைப் போராட்டத்தில் ஏராளமான தமிழர்கள் சிறை சென்றனர்.

தியாகத்தைப் போற்றுவதில் திமுக அரசு எப்போதும் முன்னோடியாக உள்ளது. மகாத்மா காந்தி நாட்டின் அடையாளமாக இருக்கிறார். அனைவரின் வளர்ச்சியையும் உள்ளடக்கியதுதான் திராவிட மாடல். அனைவரும் அர்ச்சகராகும் சமூக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் கோரிக்கையையும் நிறைவேற்றும் முதல்வராக இருக்க ஆசை. போதைப் பொருள் ஒழிப்பில் அரசு முனைப்பு காட்டி வருகிறது. 

சிறு பிரச்னையாக இருந்தாலும் அமைச்சர்களிடம் விளக்கம் கேட்கிறேன். வேறுபாடுகள் இருந்தாலும் ஒன்றிணைந்து வாழ்வதே இந்தியாவை காக்கும். அனைத்து மக்களின் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழகம் உயர்ந்துள்ளது. ராணுவ வீரர்கள் குடும்பத்திற்கு வீடும், நிதியும் வழங்கியது திமுக ஆட்சி. தியாகிகள் குடும்பத்திற்கு ஓய்வூதியத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறோம். தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.20,000-ஆக உயர்த்தப்படுகிறது. தியாகிகளின் குடும்பங்களுக்கான ஓய்வூதியம் ரூ. 10,000-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு அளிக்கப்படுகிறது. அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு அளிக்கப்படுகிறது.

அகவிலைப்படி 31%-லிருந்து 34%-ஆக உயர்த்தப்படுகிறது. அகவிலைப்படி உயர்வு மூலம் அரசு ஊழியர்கள் 16  லட்சம் பேர் பயனடைவர். 1-7-2022 முதல் கணக்கிட்டு கூடுதல் அகவிலைப்படி வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வு மூலம் அரசு ஊழியர்கள் 16 லட்சம் பேர் பயனடைவர். சென்னையில் விடுதலை நாள் அருங்காட்சியகம் அமைக்கப்படும். காந்தியாக வந்தவரை மகாத்மா காந்தியாக மாற்றியது தமிழ் மண்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com