“பகுத்தறிவு பகலவனை நினைவுநாளில் நினைவு கூர்கிறேன்” - முதல்வர் பழனிசாமி ட்வீட்

“பகுத்தறிவு பகலவனை நினைவுநாளில் நினைவு கூர்கிறேன்” - முதல்வர் பழனிசாமி ட்வீட்
“பகுத்தறிவு பகலவனை நினைவுநாளில் நினைவு கூர்கிறேன்” - முதல்வர் பழனிசாமி ட்வீட்
Published on

பொதுவாழ்விற்கு இலக்கணமாய் வாழ்ந்த பகுத்தறிவு பகலவனை அவர்தம் நினைவுநாளில் நினைவு கூர்கிறேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி என்று தனது கடைசி காலம் வரை முழங்கிய பெரியாரின் 47ஆவது நினைவு தினம் இன்று. 1973ஆம் ஆண்டு 94 வயதில் பெரியார் காலமானார். பெரியாரின் நினைவு தினத்தையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய ட்விட்டரில், “சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்தவர். சுயமரியாதையையும், பகுத்தறிவையும் மக்களுக்கு ஒருங்கே ஊட்டியவர். தான் கொண்ட கொள்கைகளை தீர்க்கமாக கடைபிடித்தவர். பொதுவாழ்விற்கு இலக்கணமாய் வாழ்ந்த பகுத்தறிவு பகலவனை அவர்தம் நினைவுநாளில் நினைவு கூர்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், எம்.ஜி.ஆர் நினைவு தினத்தையொட்டி, “சரித்திர திட்டங்கள் மூலம் தமிழகத்தின் தலையெழுத்தை சீரமைத்த நம் மக்கள் திலகம். இந்தியாவின் ஆகச்சிறந்த மக்கள் கழகத்தினை நிறுவிய மாபெரும் புரட்சித்தலைவர். மக்களுக்கு ஈகை செய்வதற்காக தன் வாழ்வினை அர்ப்பணித்த நம் பொன்மனச்செம்மலின் நினைவுநாளில் அவரை நினைவு கூர்கிறேன்” என்றும் தன்னுடைய ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார் முதல்வர் பழனிசாமி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com