தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்ற விவகாரம் - குழு அமைத்து முதல்வர் உத்தரவு

தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்ற விவகாரம் - குழு அமைத்து முதல்வர் உத்தரவு
தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்ற விவகாரம் - குழு அமைத்து முதல்வர் உத்தரவு
Published on

பட்டியல் இனத்தில் உள்ள 6 பிரிவுகளை தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுகவுடன், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால், நீண்ட நாட்களாக இந்த கூட்டணி உறுதி செய்யப்படாமல் இருந்தது. குடும்பன், பண்ணாடி, காலாடி, கடையன் உட்பட 6 பிரிவுகளை ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பெயர் மற்றும் கட்சிகளுடன் தான் கூட்டணி அமைக்கப் போவதாக கிருஷ்ணசாமி கூறியிருந்தார். 

கிருஷ்ணசாமியின் இந்த பேச்சால் அதிமுகவிற்கும், புதிய தமிழகம் கட்சிக்கும் இடையே இழுபறி நிலவி வருவதாக பார்க்கப்பட்டது. இதற்கிடையில், திமுக ஆட்சிக்கு வந்தால் தேவேந்திர குல வேளாளர்கள் என்று அரசுப்பட்டியலில் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். அதற்கு, கிருஷ்ணசாமியும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பட்டியல் இனத்தில் உள்ள 6 பிரிவுகளை தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கூடுதல் செயலாளர் ஹன்ஸ்ராஜ்வர்மா தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் அறிக்கை கிடைத்ததும் அதிமுக அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியின் கோரிக்கையின் அடிப்படையிலே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. விரைவில் அதிமுக - புதிய தமிழகம் கூட்டணி உறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com