தேர்தல் 2024 | நிறுவனங்கள் விடுமுறை தராவிட்டால் 1950 என்ற எண்ணில் புகார் கொடுக்கலாம் -சத்யபிரதா சாகு

நாடாளுமன்றத் தேர்தலுக்காக வரும் 17ஆம் தேதி மாலை 6 மணி வரை பரப்புரை செய்யலாம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுமுகநூல்
Published on

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, "92.80 விழுக்காடு வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் வழங்கப்பட்டுள்ளது. செவ்வாய் மாலையுடன் பூத் ஸ்லிப் வழங்கும் பணி நிறைவடைகிறது.

சத்ய பிரதா சாகு
சத்ய பிரதா சாகுகோப்புப்படம்

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்துவதற்கு 16.04.2024 கடைசி நாளாகும். வரும் 19ஆம் தேதி வாக்களிக்க வசதியாக தனியார் நிறுவனங்கள் விடுமுறை தரவில்லை எனில் ஊழியர்கள் 18 மற்றும் 19ஆம் தேதி 1950 என்ற எண்ணில் புகார் கொடுக்கலாம்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
Election With PT | காஞ்சிபுரத்தில் சிறப்பாக நடந்த புதிய தலைமுறையின் விழிப்புணர்வு பேரணி

விடுமுறை தராத தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை பாயும். 18ஆம் தேதி மாலைக்குள் வாக்குப்பதிவு மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டு செல்லும் பணி நிறைவடையும். நாடாளுமன்றத் தேர்தலுக்காக வரும் 17ஆம் தேதி மாலை 6 மணி வரை வேட்பாளர்கள் பரப்புரை செய்யலாம்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com