பாஜகவில் இணைந்த ரஜினி ரசிகர்கள் - யார் வேண்டுமானாலும் தலைவராக வரலாம் என அண்ணாமலை பேச்சு

பாஜகவில் இணைந்த ரஜினி ரசிகர்கள் - யார் வேண்டுமானாலும் தலைவராக வரலாம் என அண்ணாமலை பேச்சு
பாஜகவில் இணைந்த ரஜினி ரசிகர்கள் - யார் வேண்டுமானாலும் தலைவராக வரலாம் என அண்ணாமலை பேச்சு
Published on

ஜனாதிபதி யார் என்று மக்கள் முடிவு எடுத்துவிட்டார்கள் எனவும், பாஜகவில் 49% மேல் வாக்குகள் உள்ளது என்பதால், எதிர்கட்சிகள் குட்டிகர்ணம் போட்டாலும், பொது வேட்பாளர் நிறுத்தினாலும், ஒன்றும் செய்ய முடியாது என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் தஞ்சை மாவட்ட தலைவர் ரஜினி.கணேசன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் பாஜகவில், மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இணைந்தனர். இணைப்பு விழாவில் பேசிய அண்ணாமலை, “அனைவரையும் சமமாக மதிக்கக் கூடிய அரசு நமக்கு வேண்டும். மோடி என்பவர் பாஜகவில் இருக்கும் தொண்டன். அவர் பிரதம மந்திரியாக வேலை செய்கிறார். தாய் மொழி, கலச்சாரம் எல்லாத்தையும் தாண்டி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்கள் பாஜகவை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

எனவே அவரவர் மொழிக்கு உரிய மரியாதை தரப்படும். ஆன்மீக அரசியல் என்பது எதிலும் பற்று இன்றி இருக்கவேண்டும். அவரவர் மாநிலங்களில் அவரவராக இருக்க வேண்டும், ஆனால் ஒட்டுமொத்துமாக தேசியவாதியாக இருக்க வேண்டும். எல்லா கட்சியிலும் ஒனர் இருப்பார்கள், டெல்லி, கோபாலப்புரத்தில் இருப்பார்கள். ஆனால் பாஜகவில் யார் வேண்டுமானாலும் தலைவராக வரலாம். எனவே யாரிடமும் கைக்கட்டி நிற்க வேண்டாம்” இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை “ஜனாதிபதி யார் என்று மக்கள் முடிவு எடுத்துவிட்டார்கள். பாஜகவில் 49% மேல் வாக்குகள் உள்ளன. எதிர் கட்சிகள் குட்டிகர்ணம் போட்டாலும், பொது வேட்பாளர் நிறுத்தினாலும், ஒன்றும் செய்ய முடியாது. பாஜக வாக்குகளை வைத்தே சிங்கிளாக ஜெயித்துவிடுவோம்.

அதிமுக பொறுத்தவரை அவர்களுடைய கட்சிகளை எப்படி நடத்த வேண்டும், எப்படிப்பட்ட தலைவர்கள் இருக்க வேண்டும் என முழுமையாக தீர்மானிக்க கூடிய சக்தி அதிமுக மட்டுமே உள்ளது. எந்த கட்சிகள் கருத்து கூறினாலும் அது சரியாக இருக்காது. அதிமுக ஒற்றை தலைமை குறித்து பாஜக எந்த கருத்தும் கூறாது” இவ்வாறு கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com