“18 தொகுதிகள் காலியாக உள்ளது” - தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்

“18 தொகுதிகள் காலியாக உள்ளது” - தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்
“18 தொகுதிகள் காலியாக உள்ளது” - தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம்
Published on

தமிழகத்தில் 18 தொகுதிகள் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு, தமிழக சட்டப்பேரவை அலுவலகம் கடிதம் அனுப்பியுள்ளது.

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட தங்கத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்தது. 

இதையடுத்து வழக்கு 3வது நீதிபதி விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்தியநாராயணன், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி தீர்ப்பு அளித்தார். தீர்ப்பை தொடர்ந்து மேல்முறையீட்டுக்கு செல்லவில்லை என்று டிடிவி.தினகரன் தரப்பினர் கூறியதை அடுத்து, பிரச்னை ஒருவழியாக முடிவுக்கு வந்தது. அதனால் தேர்தல் அறிவிப்பு எப்போது வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், தமிழகத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் 18 தொகுதிகள் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு, தமிழக சட்டப்பேரவை அலுவலகம் அனுப்பியுள்ளது. 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை உயர்நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தகுதிநீக்கத்தை உறுதி செய்த நீதிமன்ற தீர்ப்பு நகலும் கடிதத்துடன் இணைத்து அனுப்பப்பட்டது. 

தமிழக சட்டப்பேரவை தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அடுத்த 6 மாதத்திற்குள் 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com