11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் - தேர்ச்சி விகிதங்களின் முழு விவரம்!

இன்று காலை 9.30 மணி அளவில் 11 ஆம் வகுப்பு தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.
11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்புதிய தலைமுறை
Published on

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் பயின்ற 11 ஆம் வகுப்பு மாணாக்கருக்கு, கடந்த மார்ச் 4 முதல் 25 ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடத்தப்பட்டது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 7,534 மேல்நிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்கள், தனித்தேர்வர்கள் என 8,25,187 பேர் தேர்வு எழுதினர். இதில் தனித்தேர்வர்களாக 4,945 பேரும் சிறைவாசிகள் 187 பேரும் தேர்வெழுதினர். சென்னை மாவட்டத்தில் உள்ள 591 பள்ளிகளில் படிக்கும் 65,852 மாணவர்கள் 240 மையங்களில் தேர்வெழுதினர்.

இந்நிலையில், இன்று காலை 9.30 மணி அளவில் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டது அரசுத் தேர்சுத்துறை இயக்குனரகம். இந்நிலையில், 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில், 91.17% மாணவ மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் தேர்ச்சி விகிதம் - 87.26%, மாணவிகள் - 94.69% தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்படி மாணவிகள் 7.43% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மாவட்டம் 91.68% தேர்ச்சி விகிதத்துடன் 17 ஆவது இடத்தில் உள்ளது.

11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
வெளியானது பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்

  • அரசுப் பள்ளிகளில் 85.75%

  • அரசு உதவி பெறும் பள்ளிகள் - 92.36%

  • தனியார் பள்ளிகள் - 98.09%

  • பெண்கள் பள்ளிகள் - 94.46%

  • ஆண்கள் பள்ளிகள் - 81.37%

முதல்  5 இடத்தை பெற்ற மாவட்டங்கள் 

இதன்படி, கோவை மாவட்டம் முதல் இடத்தை பெற்றுள்ளது.

  • கோவை - 96.02%

  • ஈரோடு - 95.56%

  • திருப்பூர் - 95.23%

  • விருதுநகர் - 95.06%

  • அரியலூர் - 94.96%

கடைசி 5 மாவட்டங்கள்

  • வேலூர் - 81.40%

  • திருவள்ளூர் - 85.54%

  • கள்ளக்குறிச்சி - 86.00

  • மயிலாடுதுறை - 66.02%

  • திருப்பத்தூர் - 86.88%

பாடவாரியாக நூற்றுக்கு நூறு பெற்றவர்களின் எண்ணிக்கை

  • தமிழ் - 8

  • ஆங்கிலம் - 13

  • இயற்பியல் - 696

  • தாவரவியல் - 2

  • விலங்கியல் - 29

  • கணினி அறிவியல் -3,432

தமிழகத்தில் பிளஸ் 1 தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை - 1964

பாடவாரியாக தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளின் சதவீதம் :

வேதியியல் - 96.20%

உயிரியல் - 98.25%

கணிதம் - 97.21%

விலங்கியல் - 96.40%

தாவரவியல் - 91.88%

கணினி அறிவியல் - 99.39%

அறிவியல் பாடத்தில் 94.31%

கலைப்பிரிவு பாடங்களில் 72.89%

தொழிற்பாடங்களில்- 78.72%

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com