தமிழக - கேரள நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு  

தமிழக - கேரள நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு  
தமிழக - கேரள நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு  
Published on

தமிழ்நாடு, கேரளா இடையேயான நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் - கேரளா இடையே நதிநீர் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்து முடிந்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தமிழக முதலமைச்சர் எ‌டப்பாடி பழனிசாமி‌‌, கேரளா முதலமைச்சர் தலைமையில் இருமாநில அமைச்சர்கள், அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். 

195‌ஆம் ஆண்டு போடப்பட்ட பரம்பிகுளம் - ஆழியாறு ஒப்பந்தத்தை புதுப்பிப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதற்காக,‌ முதற்‌கட்டமாக‌ இருமாநிலங்களிலும் தலா 5 பேர் கொண்ட‌குழு ஒருவாரத்தில் அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு‌ஆய்வு செய்து சமர்ப்பிக்கும் அறிக்கை அடிப்படையில், பரம்பிகுளம் - ஆழியாறு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

சகோதரர்களாக உள்ள இருமாநில மக்களுக்கும் எந்தப் பிரச்னையும் இன்றி ‌நதிநீரை பங்கிட்டு கொள்வதற்கு இந்தப் பேச்சுவார்த்தை உதவும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பரம்பிக்குளம் - ஆழியார் திட்டமட்டுமின்றி, கேரளா - தமிழகம் இடையிலான அனைத்து நதிநீர் பிரச்னை‌ளையும் சரி செய்யும் வகையில், ஆண்டு 2 முறை இருமாநில தலைமைச்செயலாளர்களும் சந்தித்து ஆலோசிப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக - கேரள மக்களுக்கு எவ்வித பாகுபாடுமின்றி தண்ணீரை பங்கீட்டு வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளுக்கு‌ம் பேச்சுவார்த்தை வித்திட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி ‌பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com