தமிழ் தான் இந்தியாவின் இணைப்பு மொழி: ஏஆர்.ரகுமான் கருத்தை வரவேற்கிறேன் - ஜெயக்குமார்

தமிழ் தான் இந்தியாவின் இணைப்பு மொழி: ஏஆர்.ரகுமான் கருத்தை வரவேற்கிறேன் - ஜெயக்குமார்
தமிழ் தான் இந்தியாவின் இணைப்பு மொழி: ஏஆர்.ரகுமான் கருத்தை வரவேற்கிறேன் - ஜெயக்குமார்
Published on

தமிழ் மொழியே இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் கருத்தை வரவேற்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ரூ. 5 கோடி நில அபகரிப்பு வழக்கில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது...

'தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கைக்கு மட்டுமே இடம். மும்மொழிக் கொள்கைக்கு அனுமதி இல்லை. உலகத்தின் முன்னோடி மொழியாக தமிழ் இருக்க தமிழகத்தில் இந்தி மொழியை எந்தவிதத்திலும் நுழைய விடமாட்டோம். பல இடங்களில் பிரதமர் மோடியே தமிழ் மொழியை சுட்டிக்காட்டி பேசி பெருமைபடுத்தி உள்ளார்.

இசைமையப்பாளர் ஏ.ஆர் ரகுமானின் கருத்தை வரவேற்கிறேன். தமிழே இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்ற கருத்து வரவேற்கத்தக்கது. தமிழ் மொழியே இணைப்பு மொழியாக இருக்க வேண்டும். இந்திக்கு இடமில்லை.

தி.மு.க ஆட்சியில் பேசப்படும் திராவிட மாடல் மக்களை ஏமாற்றும் செயல். உள்ளாட்சி பிரதிநிதிகளின் அட்டகாசத்தால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்திருக்கிறது. அ.தி.மு.க ஆட்சியில் வெளிப்படை தன்மையுடன் இருந்த டெண்டர், தி.மு.க ஆட்சியில் தி.மு.க-வினருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. கரூரில் போடாத சாலைகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட நபர்களுக்கே அனைத்து டெண்டர்களும் வழங்கப்படுகிறது.

அ.தி.மு.க-வை பொறுத்தவரை சிறப்பான வாதங்களை எடுத்து வைத்திருப்பதாகவும், தீர்ப்பு சாதகமாக இருக்கும் என நம்புகிறோம். சசிகலா வழக்கு தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com