அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்காக பத்து கோடி ரூபாய் நிதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் சமுதாயத்தின் வேண்டுகோளினை பரிசீலனை செய்து, ஹார்வர்டு பல்கலைக்கழக்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்காக 10 கோடி ரூபாய் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன். இதன் மூலம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டு இந்தியவியல் குறித்து ஆய்வு மேற்கொள்ள முடியும். தமிழ் இலக்கியம், இலக்கணம், பண்பாடு தொடர்பான ஆய்வுகளை மாணவர்கள் மேற்கொள்வதற்கும், அமெரிக்க நூலகங்களிலும், ஆவண காப்பகங்களிலும் உள்ள தமிழ் தொடர்பான ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்தலாம். பதிப்பிக்கப்படாத ஆவணங்களை படியெடுத்து பதிப்பிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு பணிகள் மூலம், தமிழ் மொழியின் வளம் உலகறியச் செய்ய வழிவகை ஏற்படும் என்று கூறியுள்ளார்.