“இவ்வளவு செலவில் சிலை வைக்க பட்டேல் சம்மதிக்க மாட்டார்” - நடிகர் சித்தார்த்

“இவ்வளவு செலவில் சிலை வைக்க பட்டேல் சம்மதிக்க மாட்டார்” - நடிகர் சித்தார்த்
“இவ்வளவு செலவில் சிலை வைக்க பட்டேல் சம்மதிக்க மாட்டார்” - நடிகர் சித்தார்த்
Published on

குஜராத் மாநிலத்தில் 3000 கோடி ரூபாய் செலவில் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு சிலை எழுப்பப்பட்டது குறித்து நடிகர் சித்தார்த் கருத்து தெரிவித்துள்ளார்.

உலகின் மிக உயரமான சிலையாக சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலம் வதோதரா அருகே 182 மீட்டர் உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி அவரது சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்து நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார். ஒற்றுமை சிலை எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் சிலையை நாட்டுக்கு அர்ப்பணிப்பதன் அடையாளமாக பிரதமர் மண்ணையும் நர்மதா ஆற்று நீரையும் ஒரு கலசத்தில் ஊற்றினார்.

இந்நிலையில், சர்தார் வல்லபாய் பட்டேல் உயிரோடு இருந்திருந்தால், இவ்வளவு செலவில் சிலை வைப்பதற்கு அவர் சம்மதித்திருக்க மாட்டார் என்று நடிகர் சித்தார்த் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “மிகவும் வீணாகவும், மரியாதை குறைவாகவும் நாட்டின் மிகப்பெரிய தலைவர்களில் ஒருவர் இன்று குஜராத்தில் கொண்டாடப்படுகிறார். சர்தார் வல்லபாய் பட்டேல் தேர்தலுக்கு பயன்படுத்தப்படுபவராக பாஜகவினரால் குறைக்கப்பட்டுள்ளார். ரூ3000 கோடி செலவில் மோடி இந்தச் சிலையை உருவாக்கியுள்ளார்.  

சர்தார் வல்லபாய் பட்டேல் உயிரோடு இருந்திருந்தால், இவ்வளவு செலவில் சிலை வைப்பதற்கு அவர் சம்மதித்திருக்க மாட்டார். அவரைப்பற்றி இவர்களுக்கு போதுமான அளவு தெரியவில்லை. கேள்விகள் கேட்பதை நிறுத்தாதீர்கள். நாம் வரி செலுத்துபவர்கள். இது நம்முடைய உரிமை” என்று குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com