புதுப்பொலிவு பெறும் தாம்பரம் ரயில் நிலையம் - 3 டி வரைபடம் வெளியீடு

தாம்பரம் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக முடங்கியிருந்த நிலையில், அந்த ரயில் நிலையத்தின் 6 நடை மேடைகளையும் இணைத்து அமைக்கப்படவுள்ள டெர்மினலின் 3 டி வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
Tambaram railway station new look
Tambaram railway station new lookpt desk
Published on

சென்னையின் 3 வது ரயில்வே முனையமாக தாம்பரம் ரயில் நிலையம் இருந்தாலும், அங்கு பயணிகளுக்கு போதிய வசதிகள் இல்லாத நிலை நிலவுகிறது. இதனையடுத்து, அந்த ரயில் நிலையத்தின் மறு சீரமைப்பிற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு டெண்டர் விடப்பட்டது. அதனை தனியார் நிறுவனம் ஒன்று கைப்பற்றிய நிலையில், பணிகள் நடைபெறாமல் இருந்து வந்தது.

சமூக ஆர்வலரான தயானந்த் கிருஷ்ணன், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற பதிலில், கடந்த 4 ஆண்டுகளாக ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணிகள் முற்றிலும் முடங்கியிருந்தது தெரியவந்தது.

Tambaram railway station new look
Tambaram railway station new lookpt desk

இந்த நிலையில் தற்போது டெண்டர் எடுத்த தனியார் நிறுவனம், ரயில் நிலைய மறு சீரமைப்பிற்கான 3டி உத்தேச வரை படத்தை சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Tambaram railway station new look
காவிரியில் நாள்தோறும் 1 டிஎம்சி தண்ணீர் தர மறுப்பு... முரண்டு பிடிக்கும் கர்நாடக அரசு

அதன்படி, ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ரயில் நிலையத்தின் 6 நடை மேடைகளையும் இணைத்து, டெர்மினல் கட்டடம் கட்டப்படவுள்ளது. அதில் ஓய்வறை, கழிவறை, உணவகம், மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தள நடைபாதை உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன.

இந்த 3 டி வரை படம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், விரைவில் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகளை தொடங்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். அந்த படங்களை, கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com