சென்னை மடிப்பாக்கத்தில் அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதி விபத்திற்குள்ளானதில் தாய் மற்றும் மூன்று வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திரிசூலத்தைச் சேர்ந்த சுதா கோவிலம்பாக்கத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டு தனது 2 குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். மடிப்பாக்கம் அருகே சென்றபோது, தாம்பரத்திலிருந்து, தி.நகர் செல்லக்கூடிய அரசு பேருந்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இதில், சுதா மற்றும் அவரது 3 வயது மகள் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அவரது 2 வயது மகன் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.