நாடாளுமன்றத்திற்கும் சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுவும் ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில், ஒரேநாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசின் சார்பில் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
மேலும் 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்ற மற்றொரு தீர்மானத்தையும் முதலமைச்சர் இன்று முன்மொழிந்துள்ளார். இரு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.