வந்தடைந்த 1 லட்சம் RT - PCR கருவிகள்: 10 லட்சம் கருவிகள் முன்பதிவு: தீவிரமாகவுள்ள பரிசோதனை

வந்தடைந்த 1 லட்சம் RT - PCR கருவிகள்: 10 லட்சம் கருவிகள் முன்பதிவு: தீவிரமாகவுள்ள பரிசோதனை
வந்தடைந்த 1 லட்சம் RT - PCR கருவிகள்: 10 லட்சம் கருவிகள் முன்பதிவு: தீவிரமாகவுள்ள பரிசோதனை
Published on

கொரோனா பரிசோதனையை விரிவுபடுத்தும் முயற்சியாக கூடுதலாக 1 லட்சம் RT - PCR சோதனைக் கருவிகள் தமிழகம் வந்தடைந்துள்ளன.

 தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று உள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக RT - PCR சோதனைக் கருவிகள் மூலம் தொடர் சோதனையை மாநில சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.தமிழகம் முழுவதும் கையிருப்பில் உள்ள 1.20 லட்சம் RT - PCR சோதனைக் கருவிகளைக் கொண்டு இதுவரை 2 லட்சத்து 16ஆயிரத்துக்கும் அதிகமான மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கூடுதல் மாதிரிகளை சோதிக்க ஏதுவாக ஒரு லட்சம் RT - PCR கருவிகள் இன்று தமிழகம் வந்தடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விரைவில் ஒரு லட்சம் RT - PCR சோதனைக் கருவிகள் ஆய்வகங்களில் இருந்து அனைத்து மாவட்ட மருத்துவமனைகளுக்கும் பிரித்து அனுப்பப்படும் என்றும், அதன் பிறகு 2.20 லட்சம் கருவிகளைக் கொண்டு தொடர் சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 இந்நிலையில், மேலும் 10 லட்சம் RT - PCR சோதனைக் கருவிகளுக்கு தென்கொரியாவிடம் முன்பதிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com