மைசூரு வனவிலங்கு பூங்காவுக்கு கொண்டு செல்லப்படும் டி23 புலி

மைசூரு வனவிலங்கு பூங்காவுக்கு கொண்டு செல்லப்படும் டி23 புலி
மைசூரு வனவிலங்கு பூங்காவுக்கு கொண்டு செல்லப்படும் டி23 புலி
Published on

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் நான்கு பேரைக் கொன்ற டி23 புலி, மயக்க ஊசி செலுத்தப்பட்டு இன்று உயிருடன் பிடிக்கப்பட்டது. 21 வது நாளாக தொடர்ந்த வந்த இந்த புலி பிடிக்கும் நிலையில், இன்றுதான் நிறைவடைந்தது. பிடிக்கப்பட்ட புலிக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்ட பின், அது மைசூரு வனவிலங்கு பூங்காவுக்கு தற்போது கொண்டு செல்லப்படுகிறது.

கடந்த 20 நாளாக T23 புலியை உயிருடன் பிடிக்க முடியாமல் திணறிவந்தது வனத்துறை. இந்தப் புலி, நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் மசினகுடி பகுதிகளில் நான்கு பேரின் உயிர் இழப்பிற்கு காரணமாகவும், 50க்கும் மேற்பட்ட கால்நடைகளை இறப்புக்கு காரணமாகவும் இருந்தது. இதைப்பிடிக்க 2 கும்கி யானைகள், காவல்துறையின் பல மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் முதன்முறை புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இருப்பினும் புலி பிடிபடாமல் நேற்று இரவு தப்பியது. இதைத்தொடர்ந்து அந்தப் புலி நேற்று இரவு சாலையொன்றை கடப்பதை பார்த்த வனத்துறையினர், அதை பின்தொடர்ந்து 2வது மயக்க ஊசியை செலுத்தினர். இவற்றை தொடர்ந்து இன்று புலி தற்போது பிடிப்பட்டுள்ளது.

இடையே புலியை சுட்டிப்பிடிக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு, பின் சுட்டுப்பிடிக்க வேண்டாமென சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தொடர் போராட்டத்துக்குப் பின் தற்போது புலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புலி பிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அதற்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு சிகிச்சைக்குப்பிறகு மைசூரு வனவிலங்கு பூங்காவுக்கு தற்போது கொண்டு செல்லப்படுகிறது. முன்னதாக புலி சிகிச்சைக்குப்பின் சென்னை வண்டலூர் உயிரியியல் பூங்காவில் வைத்துப் பராமரிக்கப்படும் என வனத்துறை அதிகாரி கூறிய நிலையில் தற்போது மைசூரு பூங்காவுக்கு அது கொண்டு செல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com