மனோஜ்,சயான் ஜாமீன் வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

மனோஜ்,சயான் ஜாமீன் வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
மனோஜ்,சயான் ஜாமீன் வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
Published on

கோடநாடு கொலை கொள்ளை தொடர்பான வழக்கில் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மனோஜ்,சயான் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கோடநாடு கொலை கொள்ளை சம்பவங்களில் முதல்வர் பழனிசாமிக்கு தொடர்பிருப்பதாக தெஹல்கா முன்னாள் ஆசியர் மேத்யூ சாமுவேல் ஆவணப்படம் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக சயான் மற்றும் மனோஜ் ஆகியோர் மீது சென்னை காவல்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

பின்னர் டெல்லி சென்ற மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் இருவரையும் கைது செய்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆனால் அவர்களை சிறையில் அடைக்க மறுத்த நீதிமன்றம், ரூ.10 ஆயிரம் பிணைத்தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதத்துடன் இருவருக்கும் ஜாமீன் வழங்கியது.இதையடுத்து சயான் மற்றும் மனோஜின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என உதகை நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இதனால் இருவரும் நேரில் ஆஜராக உதகை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தது. கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது சயான், மனோஜ் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. 

இதனால் அவர்களுக்கு தரப்பட்டிருந்த ஜாமீனை ரத்து செய்த நீதிமன்றம், இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து உதகை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனோஜ் மற்றும் சயான் இருவரும் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், மனோஜ், சயான் ஆகியோரை பிப்ரவரி 25ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது எனக் கோத்தகிரி காவல்துறைக்கு உத்தரவிட்டார். 

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரனைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி வாதிட்டார். அப்போது உதகை நீதிமன்ற வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக ஆஜராகாமல் வழக்கை இழுத்தடிக்கிறனர். சயான், மனோஜ் மீதும் காவல்நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேத்யூ சாமூவேலுக்கு பின்னால் மிக பெரிய சதி உள்ளது. முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே இந்த விடியோ வெளியிடப்பட்டுள்ளது என்று வாதடினார். இதனைக் கேட்ட நீதிபதி வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com