போக்குவரத்து போலீசாருக்கு ஸ்வைப்பிங் மிஷின்: அபராதம் வசூலிப்பது சுலபமாகிறது

போக்குவரத்து போலீசாருக்கு ஸ்வைப்பிங் மிஷின்: அபராதம் வசூலிப்பது சுலபமாகிறது
போக்குவரத்து போலீசாருக்கு ஸ்வைப்பிங் மிஷின்: அபராதம் வசூலிப்பது சுலபமாகிறது
Published on

சென்னையில் போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலிப்பது சுலபமாக்கப்பட்டுள்ளது.

சென்னை போக்குவரத்து போலீசார் இந்த ஆண்டில் இதுவரை 10 லட்சத்து 34 ஆயிரம் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 11 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளனர். ஒரு நாளைக்கு சராசரியாக 5 ஆயிரம் வழக்குகளை பதிவு செய்கின்றனர்.

பணமில்லா பரிவர்த்தனை என்று கூறி நாடு முன்னேறி வரும் சூழ்நிலையில் ‘ஸ்வைப்பிங் மிஷின்’ சென்னை போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கார்டு மூலமாக ஸ்வைப்பிங் செய்து அபராதம் வசூலித்தால் அதற்கான வரியும் வசூலிக்கப்படுகிறது. தமிழகத்தில் முதல் முறையாக வழங்கப்பட்டுள்ள ‘ஸ்வைப்பிங் மிஷின்’ மூலம் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் அபராதம் வசூலிக்க முடியாது. அவர்கள் நீதிமன்றத்தில்தான் அபராதத்தைக் கட்ட முடியும். மற்றபடி, ஹெல்மெட் அணியாதவர்கள் உள்பட பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடம் இந்த மிஷின் மூலம் அபராதம் வசூலிக்க முடியும்.

போக்குவரத்து போலீசார் என்றாலே லஞ்சம் வாங்குபவர்கள் என்பது மக்கள் மத்தியில் பரவலாக பேசப்படும் சொல்லாடல். ஆனால் இந்த மிஷின் மூலமாக லஞ்சம் வாங்குவதைத் தடுக்கமுடியும் என்கின்றனர் சென்னை போக்குவரத்து காவல்துறை உயர் அதிகாரிகள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com