பிச்சாட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு: ஆரணியாற்றில் மீண்டும் உபரி நீர் திறப்பு

பிச்சாட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு: ஆரணியாற்றில் மீண்டும் உபரி நீர் திறப்பு
பிச்சாட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு: ஆரணியாற்றில் மீண்டும் உபரி நீர் திறப்பு
Published on

ஆந்திராவின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த திடீர் மழையால் பிச்சாட்டூர் அணையில் இருந்து ஆரணியாற்றில் மீண்டும் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 நாள்களாக உபரி நீர் திறப்பை அம்மாநில அரசு குறைத்திருந்த நிலையில் பிச்சாட்டூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் நேற்று திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அணைக்கான நீர் வரத்து 400 கன அடியாக அதிகரித்ததால், ஆரணியாற்றில் இருந்து விநாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் ஆரணியாற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆரணியாற்று கரைகளில் பாதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நீர் திறப்பை குறைத்து வந்த ஆந்திர பொதுப்பணித்துறை, பிச்சாட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் கடந்த 10 நாட்களாக உபரி நீர்திறப்பை நிறுத்தியது. இந்த நிலையில் நேற்று பிற்பகலுக்குப்பின் தொடங்கி இன்றுவரை ஆந்திராவில் திடீரென பெய்த வரும் கனமழையாலும், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையாலும், அணைக்கு நீர்வரத்து 400 கன அடியாக வருவதால், மீண்டும் ஆரணியாற்றில் விநாடிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. பிச்சாட்டூர் அணையின் மொத்த கொள்ளளவான 1853 மில்லியன் கன அடியில் தற்போது, 1825 மில்லியன் கன அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com