தொடர் மழையால் மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியை எட்டியதால் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணை கடந்த இரண்டு ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் அணையின் நீர்மட்டம் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருதால் அணையின் நீர் மட்டம் சிறிது சிறிதாக உயர்ந்தது.
நேற்று காலை 9 மணி அளவில் அணையின் முழு அளவான 57 அடியில் 55 அடியை எட்டியது. இதனால் மஞ்சளார் ஆற்றங்கரையேர மக்களுகு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை சங்கு ஓசை எழுப்பப்பட்டது. பின்பு அணையில் இரண்டு மதகுகள் மூலம் அணைக்கு வரும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு நீர் வரத்தானது வினாடிக்கு 94 அடியாக உள்ள நிலையில் 94 கன அடி அப்படியே வெளியேற்றப்படுகின்றது. மேலும் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து மேலும் உயரும் என்பதால் கரையோரம் உள்ளவர்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.